திங்கள், 29 ஏப்ரல், 2019

காதலியின் இறுதி வாசகம்.

காதலியின் இறுதி வாசகம்.

உன்னைதான் வேண்டும்
உண்மையைச் சொல்லியும் 
துரோகிதான்! வீட்டிற்கும் 
உன்னினைவால் அவருக்கும்.
நம்    நினைவில் 
மூழ்கியிருக்கையில்
மகிழ்ச்சியாக அவர்
பேச முற்படுகையில் 
நான்பட்ட வலி 
எனக்குதான் தெரியும்.
அனைவரின் கட்டாயத்தால் 
அவரை கணவராக 
கட்டியதால் உனக்கு 
நான் துரோகிதான்!
கத்தி அழவும் முடியாமல்
சொல்லவும் முடியாமல்
உயிர்விடவும் முடியாத என்
வலியை நான்மட்டுமே
அறிவேன் காதலா,
 கானல் நீர் கவிதை தொகுப்புARk . 

வியாழன், 14 பிப்ரவரி, 2019

காதலும் கோபமும்

பெரிய புராணம் - காதலும் கோபமும் 


சுந்தரர் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார். எல்லோரும் திருமண மண்டபம் வந்து விட்டார்கள். அப்போது, சிவ பெருமான் ஒரு முதியவர் வேடத்தில் வந்து "இந்த சுந்தரன் என் அடிமை. இவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது ...நான் இட்ட வேலைகளை செய்து கொண்டு எனக்கு அடிமையாக இருக்க வேண்டும் ..இவன் எனக்கு அடிமை என்று இவன் தாத்தா எழுதித் தந்த ஓலை என்னிடம் இருக்கிறது " என்றார்.

அது கேட்ட சுந்தரர் கோபம் கொண்டு "நீ என்ன பித்தனா ? எங்காவது ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆவது உண்டா " என்று பேசினார்.

சிவன்: "அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். ஆனால் இப்போது புறப்படு. நிறைய வேலை இருக்கிறது "

சுந்தரர் பார்த்தார். இந்த ஆளைப் பார்த்தால் மனதில் ஏதோ ஒரு அன்பு பிறக்கிறது. இருந்தாலும் இவர் சொல்வதைக் கேட்டால் கோபம் வருகிறது. எதுக்கும் அந்த ஓலையில் என்ன தான் எழுதி இருக்கிறது என்று பார்த்து விடுவோம் என்று நினைத்து "சரி, நீ ஓலையைக் காட்டு"  என்றார்.


பாடல்


கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்
கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்
உண்டு ஓர்ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று 
தொண்டனார் ‘ஓலை காட்டு’ என்றனர் துணைவனாரை.


பொருள்

கண்டது ஓர் வடிவால் = கண்டது ஒரு வடிவத்தை


உள்ளம் காதல் செய்து  = கண்டவுடன் உள்ளம் காதல் கொண்டு

உருகா நிற்கும் = உருகி நிற்கும்

கொண்டது ஓர் பித்த வார்த்தை  = ஆனால், இவர் பேசுவதோ பைத்தியகாரன் மாதிரி இருக்கிறது

கோபமும் உடனே ஆக்கும் = கேட்டவுடன் உடனே கோபம் வருகிறது

உண்டு ஓர்ஆள் ஓலை  = ஒரு ஓலை இருக்கிறது என்று சொல்கிறாரே

என்னும் அதன் உண்மை அறிவேன் = அதன் உண்மை என்ன என்று அறிவேன்

என்று  = என்று மனதில் நினைத்து

தொண்டனார் = சுந்தரர்

 ‘ஓலை காட்டு’ என்றனர் = சரி அந்த ஓலையை காட்டு என்றார்

 துணைவனாரை. = துணைவனான சிவனைப் பார்த்து

காதல் ஏன் வருகிறது, எப்படி வருகிறது என்று சொல்ல முடியாது. பார்த்த ஒரு கணத்தில் வந்து விடும்.

அது தான் அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வேறுபாடு.

மூளை எதை கொடுத்தாலும் ஆராய்ந்து கொண்டே இருக்கும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாது. ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்வி கேட்கும்.

மனம் அப்படி அல்ல. காரணம் இல்லாமல் , அப்படியே முடிவு செய்து விடும்.

சிவனை கண்டவுடன் சுந்தரருக்கு உடனே மனதில் காதல் பிறந்தது.

இராமன் மிதிலைக்கு வருகிறான். சாலையில் நடந்து வருகிறான். மேலே மாளிகையில் இருந்து சீதை காண்கிறாள். முதல் தடவை இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள்.

பார்த்த அந்த கணத்திலேயே காதல் பிறக்கிறது. இருவர் இதயமும் இடம் மாறுகிறது.

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் என்பான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்.

பருகிய நோக்கு எனும்
    பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம்
    உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும்
    வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு
    இதயம் எய்தினார்.



பார்வையிலேயே பாசம் பிணைத்தது என்கிறான் கம்பன்.

இராமன் கானகம் போகிறான். தூரத்தில் அவன் வருவதை அனுமன் காண்கிறான்.

பார்த்தவுடன் காதல் பிறக்கிறது. "என் எலும்பு உருகுகிறது. அளவற்ற காதல் பிறக்கிறது. அன்புக்கோ அளவு இல்லை. இது எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை " என்று தவிக்கிறான்.

துன்பினைத் துடைத்து, மாயத்
    தொல் வினை தன்னை நீக்கித்
தனெ்புலத்து அன்றி, மீளா
    நெறி உய்க்கும் தேவரோ தாம்?
என்பு நெக்கு உருகுகின்றது;
    இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை;
    அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன்.

குகன் இராமனைக்  கண்டபோதும், விபீஷணன் இராமனைக் கண்ட போதும் இதே நிலை தான்.  பார்த்தவுடன் மனதில் ஒரு சிலிர்ப்பு வரும். நீண்ட நாள் பிரிந்த பின் கூடுவது போல ஒரு அன்பு பிறக்கும்.

முன்பே கூறியது போல, இறைவனை தேடி காண முடியாது. அவனை காணும் போது உள்ளம் அறியும். அறிவுக்குத் தெரியாது. அறிவு தேடிக் கொண்டே இருக்கும். அறிவின் வேலை அது.

சுந்தரருக்கு சிவன் மேல் காதல் பிறந்த அதே நேரம், சிவனின் சொற்களை கேட்டு கோபமும் பிறக்கிறது.

இருந்தும், இரண்டையும் ஒதுக்கி வைத்து விட்டு உண்மை என்ன என்று அறிய முற்படுகிறார்.

நாம் வாழ்வில் உணர்ச்சி மிகுதியில் பல தவறான முடிவுகளை எடுத்து விடுகிறோம்.

அது அன்பாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி

 நிதானமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்  தெய்வப் புலவர் சேக்கிழார்.

பெரிய புராணத்தில் ஒவ்வொரு பாடலும் அவ்வளவு இனிமை. அவ்வளவு ஆழமான அர்த்தங்களைக் கொண்டது.

மூல நூலை தேடிப் படியுங்கள்.

காதல் தாகம்

ஐந்திணை ஐம்பது - காதல் தாகம்


ஐந்திணை ஐம்பது

இந்த நூல் தமிழர்களின் அக வாழ்க்கையை பற்றி கூறும் நூல்.

எழுதியவர் மாறன் பொறையனார்.

நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்.

1700 வருடம் தாண்டி விட்டது.

கால நதியில் அடித்துச் செல்லப் படாமல் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டது.

மாறன் பொறையனார் நினைத்தாவது பார்த்திருப்பாரா, அவரின் பாடல்கள் இன்டர்நெட்-இல் உலாவும் என்று !

சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றி கூறும் நூல்.

அவர்களின் ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள், காதல் இவற்றை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் பாடல்கள்.

அதிலிருந்து ஒரு பாடல்....

அதுவோ பாலை நிலம்.

சுட்டெரிக்கும் வெயில்.

நா வரளும் அனல் காற்று.

தப்பி வந்த இரண்டு மான்கள் தண்ணீருக்காக அலைந்து கொண்டு இருந்தன.

கடைசியில் ஒரு சின்ன சுனை கண்ணில் பட்டது.

அதில் இருந்ததோ கொஞ்சம் போல் தண்ணீர்.

இரண்டு மானுக்கும் பத்தாது.

ஒன்றை ஒன்று பார்த்து கொண்டன.

பெண் மான் சொன்னது, "நீ முதலில் குடி, பின் நான் குடிக்கிறேன்" என்று.

ஆண் மானும் அதையே சொன்னது.

யார் முதலில் குடிப்பது என்று அவர்களுக்குள் அன்புச் சண்டை.

கடைசியில் ஆண் மான் "சரி, நானே குடிக்கிறேன்" என்று நீரில் வாய் வைத்து "சர்" என்று உறிஞ்சியது.

ஆனால் உண்மையில் குடிக்கவில்லை. சப்த்தம் மட்டும் தான் செய்தது.

ஆண் மான் நீர் பருகி விட்டதாக எண்ணி, பெண் மானும் குடித்தது.

முதலில் ஆண் மானுக்கு கொடுத்ததால், பெண் மானுக்கு ஒரு சந்தோஷம்.

தான் குடிக்காமல், பெண் மானுக்கு கொடுத்ததில், ஆண் மானுக்கு சந்தோஷம்.

அந்தப் பாடலை படிப்பதில் நமக்கு சந்தோஷம்.

புதன், 20 ஜூன், 2018

புதுக்கவிதையின் பாடுபொருள் புதுமைகள்

    

இராஜ்குமார்  ஆறுமுகம் 
arajkumartamil88@gmail.com
 
 
     புதுக்கவிதையின் பாடுபொருள் புதுமைகள்

 
 
முன்னுரை

    யாதும் ஊரே யாவரும் உறவினர்கள் என்று வாழ்ந்துவந்தவன் தமிழன். தீதும் நன்றும் அவர்அவர் செயல்கலால் விளைவது என்ற யதார்த்ததை இலக்கியத்தில் பதிவு செய்து வாழ்தவன் தமிழன். இன்றைய கவிதைகளில் பாடுப்பொருள் புதுமைகளைப்பற்றி இக்கட்டூரையில் ஆய்வோம்
புதுக்கவிதைகள்
    தமிழ் யாப்பு மரபில் சங்ககாலத்தில் ஆசிரியப்பாவும், நீதியிலக்கிய காலத்தில் வெண்பாவும், காப்பியக்காலத்தில் விருத்தப்பாவும் கொலோச்சியது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிபா, பரிப்பா என்று யாப்பு அடிப்படையில் பாடிவந்த மரபை உடைத்து எந்த யாப்பு வகையும், இலக்கணமும் இன்றி எழுதப்படுவதே புதுக்கவிதைகள் ஆகும்.

பாடுப்பொருள்


    தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்வேறுபட்ட பாடுப்பொருள்கள் காலம்தோறும் தோன்றிவந்துள்ளன. சங்ககாலத்தில் காதல், வீரம் என்ற பாடுப்பொருளையும், நீதியிலக்கியத்தில் அறம் மட்டும் பாடுப்பொருளாகவும், பக்த்தியிலக்கியத்தில் இறையுணர்;வையும், காப்பியக்காலத்தில் அறம்,பொருள், இன்பம்,வீடுப்பெறும், என்ற பாடுப்பொருள்களும், சிற்றிலக்கிய காலத்தில் தனிப்பட்ட ஒருவர் வாழ்வியல் பற்றியும் பாடுப்பொருளாக பாடப்பட்டுள்ளது. இக்காலத்தில் அனைத்து துறைகளும் பாடுப்பொருளாக வைத்து பாடப்படுகின்றன.


அரசியல்  

    ஒவ்வொருவரும் கணவில் ஒரு கோட்டையை கட்ட நினைப்பதும் உண்மையே சிலர் அதிகார கணவில் இருப்பர், சிலர் வாழ்கையே கணவு போல முடியும்.  சிலர் பணம் மட்டுமே வாழ்கையாக கொண்டுள்ளனர். அரசியலில்  எப்படியாவது ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்கிற வேட்கையில்  பலகுழப்பங்களை செய்கின்றனர். மக்கள் பலரையும் குழப்பி எளிதில் அரசியல்வாதிகள் வெற்றிப்பெறுகின்றனர். இதை
    வலையில்லாமல் பிடிக்கிறார்கள்
    குழம்பிய குட்டையில்
    நிறைய நெளிகின்ற மீன்கள்
                (காக்கையின் வண்ணப்படம்)
என்ற பாடலில் கவிஞர் ந.க துறைவன் இக்கருத்தை காக்கையின் வண்ணப்படம் எனும் நூலில் பாடுப்பொருளாக பதிவுசெய்கிறார்.
    அரசன் படையெடுத்து வென்று நாட்டை கைப்பற்றினான் என்று வரலாற்று இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் இன்றை அரசியல்வாதிகள் எதை முன்னிறுத்துகின்றனர் என்றால் மற்றவர் செய்த குற்றங்களைதான்  இதை
    குற்றவாளிகளே
    குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்
    கேட்டு ரசிக்கும் வாக்காளர்கள்.
        (காக்கையின் வண்ணப்படம்)
புதுக்கவிதையில் கவிஞர்கள் இவ்வாறாக பதிவு  செய்கின்றனர். மேலும்
    நீதி வழங்கவேண்டிய நீதி பதிகளே  குற்றம் இழைக்கும் சமுக அவலத்தை புதுக்கவிதையின் பாடுப்பொருளாக கொண்டு
    உன் தராசுத் தட்டுகளைக்
    கொஞ்சம் கண்திறந்து பார்
    அங்கே
    புறாவின் மாமிசத்தை
    சிபிகள்  உண்ண ஆரம்பித்து விட்டனர்
            ( அப்துல் ரகுமன்  கவிதை தொகுப்புகள்)
என்றவாறு பதிவு செய்துள்ளனர்.
    எங்கு சென்றாலும் தமக்கு நீதி மறுக்கப்படுவதை பலரும் அனுபவக்கின்றனர். எல்லாம் தலைவிதி என்று பலர் கூறுவதை நம்மால் பார்க்கத்தான் முடிகிறது இதை
    சிலம்பை
    உடைத்து என்ன பயன்
    அரியனையிலும்
    அந்தக் கொல்லன்
        (தமிழன்பன் கவிதைகள்)
என்று முறைக்கேட்டையும், அதை அனுபவிப்பவரின் மனவோட்டத்தையும் பாடுப்பொருளாக கொண்டு கவிதை இயற்றியுள்ளனர்.

தண்ணீர் பஞ்சம்

    மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகதான் இருக்கும் என்பர் அறிஞர்கள். கையால் அள்ளி பருகிய தண்ணீரை இன்று பைகளில் அடைத்து வைத்து விற்கும் நிலைதான்   நிலவுகிறது. இதை
    சுட்டெரிக்கும் வெயில்
    தாகமாய் நடக்கும் மனிதர்கள்
    பாதையோரம் தர்பூசணிகள்
            (காக்கையின் வண்ணப்படம்)
என்ற பாடலில் ந.க துறைவன் பதிவு செய்கிறார். கூடவே தர்பூசணியும் விற்கப்படுவதாக மாற்றையும் பதிவுசெய்கிறார்.

தொழில் நூட்ப தோல்வி

    இருபதாம் நூற்றாண்டில் நாம் தொழில் நூட்ப யுகத்தில் வாழ்ந்துக்கொண்டுள்ளோம். தொழிநுட்பத்தின் வளர்ச்சியை மட்டும் அல்லாமல் அதன் தோல்வியையும் நகையாடுவதாக
    எங்கிருக்கிறது என்று
    மீன்கள் அறியுமா
    தேடப்படும் விமானம்
            (காக்கையின் வண்ணப்படம்)
 என்று  கவிதையாக  கவிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

கலவரம்

    மனித மரபணுவிலே சுயநலம், ஆதிக்கப்போட்டிகள் நிறைந்துள்ளன. இந்திய வரலாற்றிலே தந்தையை சிறைப்படுத்தி அல்லது கொன்றும், இரத்த உறவுகளை கொன்றும் அரசாச்சி கைப்பற்றி ஆண்டதையும் அறிகிறோம். அதுப்போல ஊர் திருவிழாக்களில் வெளிப்படும் கலவரத்தை
    அம்மன் கொடை விழாவில்
    ஆதிக்கப் போட்டி
    ஊருக்குள் கலவரம்
        (காக்கையின் வண்ணப்படம்)
என்று  கவிதையாக  கவிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

விலைமகளிர்

    சமுகத்தில் உள்ள அனைத்து மக்களின் மன உணர்வுகளும் புதுக்கவிதையாக மிளிர்வதை நம்மாள் பார்க்க முடிகிறது. விளைமகளிரின்  வருமையை கவிஞர்
    நாங்கள் நிர்வாணத்தை
     விற்பனை செய்கிறோம்
    ஆடைவாங்குவதற்காக.
        (கருப்பு மலர்கள்)
இவ்வாறாக பதிவு செய்கிறார்.   

தவிப்பு

    நிலைத்தை இழந்த ஒருவரின் தவிப்பையம் புதுகவியாளர்கள் பதிவு செய்ய தவறவில்லை வலியோடு
     தந்தையிடம் நிலமிருந்தது
    மகனிடம் நிலமிருந்தது
    இழந்த நிலத்தில் அடுக்கங்கள்.
        (காக்கையின் வண்ணப்படம்)
இவ்வாறாக பதிவுசெய்துள்ளனர்.

ஏமற்றம்.

    தமக்கு கிடைக்கவேண்டிய  உண்மையான உரிமைகள் கிடைக்காமல் மக்கள் பலர் உள்ளனர். அவர்களின் உள்ளத்தை புரிந்துக்கொண்டு  அவர் தம் நிலையை

    அனைக்கட்டில் இருந்து
    திறக்கபடும் தண்ணீரானது
    பள்ளங்களை ஏமாற்றி
    மேட்டை நோக்கியே பாய்கின்றன.
            (கண்ணிர் பூக்கள்)
என்று பாடுப்பொருளாக கொண்டு புதுக்கவிதை படைக்கப்பட்டுள்ளது.

அழகு

    சங்க காலம் முதல் அழகு முக்கியத்துவம் கொடுத்து பாடப்பட்டுள்ளது. ஆனால் புதுக்கவிதையில் பெண்களின் யாதார்த்த அழகையும் அவர்களை கானும் ஆணின் மனவோட்டத்தையும் அழகாக
    அழகாய் இல்லாததால்
    அவள் எனக்கு
    தங்கையாகிவிட்டாள்
        (அவளின் பார்வை)
அழகு குறையைக் கூட பாடுப்பொருளாக பதிவு செய்துள்ளனர்.

திருநங்கை

    சமுகத்தில் குற்றம் சுமத்தவும், திட்டவுமே ஒரு சிலரை பதிவு செய்து வைத்த நிலை போக அவர்களின் மன உணர்வுகளையும் பதிசெய்யும் நிலையில் புதுக்கவிதையின் பாடுப்பொருள்கள் அமைந்துள்ளன.
    அருகில் யாரமில்லை
    எடுத்துப் பூசிக்கொண்டான்
    முகம்மெல்லாம் மஞ்சள் சாந்து
            (காக்கையின் வண்ணப்படம்)
என்று புறக்கனித்தவர்களைப் பற்றியும் புதுகவிதையில் அவர்கள் உணர்வையும் பாடுப்பொருளாக கொண்டு படைக்கப்படுவதை அறியமுடிகிறது.

முடிவுரை


    புதுக்கவிதைகளில் ஒரு குறிப்பிட்ட பாடுப்பொருள்களை கூறாமல் பல்வேறுபட்ட பாடுப்பொருள்களை கொண்டு கவிதை படைக்கப்படுகின்றன. சான்றாக அரசியல், காதல், வீரம், மற்றும் சமுக அவலங்கள், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் உணர்வுகள், புறக்கணிக்கபடுவர்களின், நிலை மற்றும் விலைமகளிர் பற்றியும் ஒரு பரந்துபட்ட பாடுப்பொருளைக்கொண்டே பல்வேறு புதுக்கவிதை தொகுப்புகள் உருவாகின்றன. இத்தகைய பாடுப்பொருள்கள் தமிழ் மரபுக்கே புதுமையானது. அரசன், தலைவன், இறைவன்  என்று பாடியிருந்த பாடுப்பொருள்களும் இக்காலத்தில் புதுமையாக்கம் பெற்று பல்வேறு பாடுப்பொருளை கொண்டு கவிதைகள் உருவாக்கபடுகின்றன.

துனைநூல்கள்.

1)    காக்கையின் வண்ணப்படம்( சென்ரியு கவிதைகள்)— ந.க துறைவன்
2)    தவளை குதித்த குளம் --- ந.க துறைவன்
3)    கருப்பு மலர்கள்--நா. காமராசன்
4)    மீனாட்சி கவிதைகள்--மீனாட்சி
5)    கண்ணீர் பூக்கள்--மு. மேத்தா
6)    அவளின் பார்வை – கலாப்ரியா
7)    தமிழன்பன் கவிதைகள்- ஈரோடு தமிழன்பன்.

கிரேக்க மொழி

                                               

இராஜ்குமார்  ஆறுமுகம் 

arajkumartamil88@gmail.com
 

                                                                           கிரேக்க மொழி

                         கிரேக்கம் உலகச்செம்மொழிகளில் ஒன்று என நாம் அறிவோம். கிரேக்கம் என்பது ஓரு மொழியா? அதன் முந்தைய இடம் எது? அம்மொழியில் தோன்றிய இலக்கண இலக்கியங்கள் யவை? இலக்கிய பாடுபொருள்கள் யாது? போன்ற வினாக்களுக்கு விடைத்தேடுவேம்.  மேலும் தழிழ் மொழிப்போல் புகழ்பெற்ற கிரேக்கர்கள் பற்றியும் இக்கட்டூரையில் காண்போம்.

கிரேக்க நாடும் கிரேக்கமொழியும். 

                    தொன்மைத் தன்மையும் இலக்கண இலக்கியப் பாரம்பரியமும் உடைய மொழிகளே செவ்வியல் மொழிகள் என்றழைக்கப்பட்டன. ஓரு மொழியின் அம்மொழி இலக்கியத்தின் தொன்மை தன்மையை அறிய அந்நாட்டின் நாகரிகத் தோற்றம், அடிப்படைச்சான்றாக அமையும் என்பர் வரலாற்றறிஞர்கள், ஐரோப்பிய மொழிக்குடுபத்தில் கிரேக்கம் ஒர் உட்பிரிவாகும். கிரேக்கத்தின் தாய்மொழி ஆர்க்டோ -சைட்ரியன் மொழியாக இருக்கலாம் என்பர் ஆய்வாளாகள்.
ஐரோப்பிய மொழிக்குடுபத்தில், ஒர் உட்பிரிவு கிரேக்க மொழியாகும். முன்பு கிரிஸ் என்றழைக்கப்பட்டுப் பின்புதான் கிரேக்கம் என்றாகியது. உலக மொழிகளில் தொன்மையானது கிரிஸ். கிரேக்கர் என்பது உரேமர்கள் இட்ட பெயர்களாகும். கிறஸ்து சகாப்தத்திற்கு முன்பு (சுமாh; கி.மு 5 ) .கிரிஸைச் சார்ந்த யுpபியா என்ற பிரதேசத்து கிரையி என்ற ஜாதியினர் இத்தாலியின் மேற்குப் பக்கத்கில் நேப்பிளில் குடியேறினர். இவர்களைக் கிரேக்கர்கள் என்று அழைத்தனர். இவர்கள் இதன் பிறகு எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தார்களோ அந்தபிரதேசம் முழுமையும் கீரீஸ் என்று அழைக்கபடலாயிற்று. அங்கு வசித்த அனைவரும் கிரேக்கர்கள் என அழைக்கப்பட்டனர்.
முன்பு கிரிஸிற்கு ஹெல்லாய் என்ற பெயர் இருந்தது. கிரேக்கத்தின் முத்த சந்ததியினர் ட்யுக்கோலின் இ பிக்ரா என்ற இருவர் ஆவர். ஆவர்களின் மகன் ஹெலலன் ஆவான் . அவன் வழிவந்தவர்கள் ஹெலன்னியர்கள் இவர்கள் வசித்த பிரதேசம் ஹெல்லாய் ஆகும்.
ஹெல்லனுக்கு இயோனஸ், டோரஸ் என்ற இரண்டு பிள்ளைகள் அயோனி, அக்கிஸிஸ்; என்ற இரண்டு பேரப்பிள்ளைகள் இருந்தனர் இவர்கள் சந்ததியினர் தான் கிரேக்கர்களுக்குள்ள நான்கு பிரிவினராகிய அயேர்லீயர், டோரியர், அயோனியர், அக்கீயர், ஆவார்.
இந்நான்கு பிரிவுகளினடிப்படையில் தான் கிரேக்க வரலாறு பிரிவினருள் ஒருவரான அக்கீர்யர்கள் பெலாப் பொனேசியாவுக்கு வந்து தங்களை வளப்படுத்திக் கொண்டனர். இவர்கள் பெலாஜ்ஜிய மைசீகியர்ககுத் தங்கள் பண்பாடு மொழி முதலிவற்றைக் கொடுத்து அவர்களுடன் கலந்தனர் . கி.மு 1250 இல் பெனகலாஜ்ஜியர்களை அக்கியர்கள் ஆளும் சாதியினராயினர். இந்த
ஐக்கியத்திலிருந்துதான் கிரேக்க நாகரிகம் ஆரம்பமாயிற்று என்பார் வெ. சுhமிநாதசர்மா (கிரிஸ் வாழ்ந்த வரலாறு பக்க 24 29).
இந்நான்கு குழுவினரும் பேசிய மொழிகள் கிரேக்க மொழிகள் என்று அழைக்கப்பட்டன . இந்த நான்கு கிரேக்க மொழிகளும் 24 எழுத்துடன் ஒரே வடிவத்தைத்தான் முதலில் பயன்படுத்தின பின்பு அயோனிக் கிரேக்கம் ஆதிக்கம் செலுத்தி ஏனைய மூன்றையும் பின்னுக்குத் தள்ளியது. என்று கிரேக்க வரலாறுகள் சுட்டுகிண்றன.
மேலும் கிரேக்கத்தில் முதன் முதல் எழுத்து ஹெமரின் காப்பியங்கள் ஐயோனிக் வட்டத்தில் எழுதப்பட்டதால் இக்காப்பியம் ஐயோனிக் காப்பியங்கள் என்று குறிப்பிடும் தன்மையும் இங்கு நினைவு கூரத்தக்கது. செவ்வியல் மொழியான கிரேக்கம் பல வட்டர மொழிகளுக்கும் இடம் கொடுத்தது. கிரேக்க நாகரிகத்தின் நாகரிகத் தேற்றத்தை ஒட்டி கிரேக்கமொழி கிருஸ்து சகாப்தத்திற்கு முன்பே தோன்றி வளர்ந்த தொன்மைத்தன்மையும் இலக்கண பாரம்பரியமுடையது. என வரலாற்றுத்திறனாய்வாளர்கள் கருதுகின்றனர்

கிரேக்க மொழி இயல்புகள் 

                       தமிழ் மொழியைப்போலவே கிரேக்க மொழிக்கும் பல இயல்புகள் உள்ளன அவை நாகரிகம் தோன்றிய தொன்மைக்காலத்தில் உருவானது.
சிறந்த இலக்கண இலக்கிய வளமும் பண்பாட்டு பாரம்பரியத்தையும் உடையது.  திருந்திய மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது.
திருந்திய மொழிக்குடும்பத்தின் முலமொழி கிரேக்க மொழி ஆகும்
திருந்திய வரிவடிவ அமைப்பு உடையது.
தனித்து இயங்கும் அமைப்பு உடையது
பல வட்டார மொழி வளர்ச்சிக்கு இடமளித்தல்
எண்ணற்ற ஒலிவகைகளைத் தன்னகத்தே உடையது.
கிரேக்க மொழி: கிரேக்க  மொழிக்குடும்பத்தின் எழுத்து முறையை தோற்றுவித்த பெருமையுடையது.

கிரேக்க இலக்கிய பாடுபெருளகள்

                           தமிழ்மொழியானது சங்ககாலத்தில் காதலையும் வீரத்தையும், அடுத்தடுத்த காலங்களில் பக்தி, சமுகதின் பொறுப்புகளை பாடுப்பொருளாக கொண்டிருந்ததை போல் கிரேக்க மொழியும்  உலகப் பொதுமையில் நாட்டம், தற்சார்பின்மை பாராட்டும்; படைப்பாளின் இனம் காட்டாமல் பாடுபொருளில் கவனம் செலுத்துதல், பாடுபொருலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையிலும் வடிவச் செம்மை பாதுகாக்கபடுதல், தனிமனிதரின் இனம் காட்டாது பொது மனித மாதிரிகள் இனம் காட்டுதல், இயற்கை புனைவுகளும் வாழ்வுடன் இயந்த தன்மையுடையதாகச் செவ்வியலில் காணப்படும் கருத்து வெளிபடுத்தும் முறையில் காரண-காரிய இயைபுகள் காணப்படும் இறந்தகால மரபுகளை போற்றும் பண்புடையது. மேலும்
சமுதாயசிந்தனைகளை வெளிபடுத்தும் இயல்புடையது, மரபு வழிப்பட்ட கவிதை நடையை கொண்டதாகவும்,  இன்பம் நோக்கியதகாவும்  தனிபட்ட இலக்கிய யுத்தி கொண்டதாகவும்  செவ்வியல் மரபுக்குட்பட்ட கற்பனை கொண்டதாகவும், சமயம் சாh;ந்த தொன்மக் கதை உருவகத்திற்கு இடமளித்துள்ளது. இது போன்று பல்வேறு இலக்கிய வகமைகளை பாடுப்பொருளாக கொண்டுள்ளது.

கிரேக்க எழுத்துகள் 


                  தமிழர் எவ்வாறு தமிழ் பிராமி, வட்டெழுத்து, தமிழி எழுத்து, சில கிரந்த எழுத்துகளை பயன்படுத்தியுள்ளனரோ அதுப்போல கிரேக்கா;களும்  இருவகையான எழுத்துகள பயன்படுத்தியுள்ளனர். 14 ஆம் நூற்றாண்டில் லிணியா;1 எழுத்து வகையும், சில ஆண்டுகளுக்கு பின் லிணியர்2 என்ற எழுத்து வகையும் பயன்படுத்தினர்

கிரேக்க இலக்கிய பிரிவுகள் 


            தமிழ் இலக்கியத்தை எவ்வாறு பழங்காலம், செவ்வியல் காலம் அல்லது சங்க இலக்கிய காலம், பக்தியிலக்கிய காலம், காப்பிய காலம், சிற்றிலக்கிய காலம் உரைநடை இலக்கிய காலம் அல்லது தற்காலம் எனப்பகுத்துள்ளோமோ அதுப்போல கிரேக்க மொழியில் உள்ள இலக்கியத்தின் காலத்தை பழங்காலம், செவ்வியல் காலம், வெஸ்னிய காலம், இக்காலம் என பகுத்துள்ளன.

              தழிழ் இலக்கியத்தில் பழங்காலம் என்பது தொல்காப்பியத்திற்கு முந்தைய காலமாகும் கிரேக்க மொழியில் கி.மு 5 முதல் கி.மு 4 வரையுள்ள காலம் பழங்காலம் ஆகும். இக்காலத்தில் காப்பியம், உணர்ச்சி பாடல்கள், இரங்கற்பா, நாடகம் தோன்றியது. காப்பியத்தின் தந்தை என்று ஹெமர் அழைக்கபடுகிறார். இவரின் இலியட் ஓடிசி எனும் இரு காப்பியமும் இந்தியாவில் உள்ள மகாபாரதம், இராமயணம் போன்று உலக புகழ்பெற்றது. பழங்காலத்தில் இன்பவியல், துன்பவியல் நாடகங்கள் அதிகமாக தோன்றின. இக்காலகட்டத்தில்
ஹேமர், ஆர்ச்சிலோக்கஸ், பாக்ஸைட், சொலான், சிமோனிட்ஸ் பொன்றவர்கள் குறிப்பிடத்தக்க இலக்கியங்களை உருவாக்கினாh;கள்.

செவ்வியல் காலம்

                   தமிழ் மொழியின் செவ்வியல் காலம் தொல்காப்பியக்காலம் முதல் பக்தி இலக்கிய காலத்திற்கு முன்புவரையாக கருதபடுகிறது. இருப்பினும் சங்ககாலம் தமிழ் மொழியின் செவ்வியல் காலமாகும் தமிழ் மொழி போலவே கிரேக்க மொழியின் செவ்வியல் காலம் கி.மு5 முதல் கி.மு 4 வரையுள்ள காலம்  ஆகும்.
கிரேக்க இலக்கியத்தின் திருப்பு முனை காலமாக இக்காலத்தை; கருதுகின்றனா;.
வரலாற்றின் தந்தை என அழைக்கபடும் ஹெராடோடஸ் இக்காலத்தில்தான் வாழ்ந்துள்ளாh;. துன்பவியல் நாடகம் இக்காலத்தில் அதிகளவில் உருவாக்கப்பட்டன. துன்பவியல் நாடகத்தின் தந்தை என அஸிலஸ் அழைக்கப்படுகிறார்.  கூட்டுணர்ச்சி பாடல்களும் இக்காலத்தில் அதிகம் தோன்றியுள்ளன. கிரேக்க மொழியின் கூட்டுபாடலின் தந்தை என பிண்டர் அழைக்கப்படுகிறார் கூட்டு உணர்சி பாடல்கள் டயோனிஸஸ் கடவுளுக்காக பாடப்பட்டது. மேலும் சிறந்த துன்பவியலின் ஆசான்களாக, சொப்போக்கில்ஸ் மற்றும் யுரிப்பைட்ஸ் அகிய இருவரையும் அழைக்கின்றனர். மேலும் துன்பவியல் நாடகத்தின் முன்னோடிகளாகவும் அழைக்கபடுகின்றனர். ஆரிஸ்டோபென்ஸ் என்பவர் இன்பவியல், துன்பவியல் எனும் இரு  நாடகங்களையும்  உருவாக்கினார் துன்பவியல் பாடல்களை யாட்டுப்பாடல்கள் என்றும்  இன்பவியல் பாடல்களை ஆடுபவர்களின் பாடல் என்றும் அழைக்கின்றனர்.

சிறந்த நாடகவிலார்கள்   

                  தமிழ் மொழியல் பேரகத்தியம் எனும் நூல் இயல், இசை, நாடகம் எனும் மத்தமிழுக்கும் இலக்கணம் கூறியது பல நாடக நூல்கள் தோன்றியுள்ளன. 19 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த சங்கரதாஸ் சாவமிகள் தமிழ் நாடகத்தின் தந்தை என அழைக்கபடுகிறார். கிரேக்க மொழியல்  ஆசிலஸ், யுரிபைட்ஸ், செப்பக்கில்ஸ் போன்றவர்கள் சிறந்த நாடகவிலாh;களாக கருதபடுகின்றனா;. ஆசிலஸ் பல போர் நாடகங்கள் பல உருவாக்கியுள்ளார். செப்பக்கில்ஸ் பேர்சியா போரை மையமாக வைத்து பெர்சியஸ் நாடகமாக அரங்கேற்றம் செய்தார். இது போல  பல நாடகங்களை எழுதியுள்ளார். டையோனிசஸ் கோவில் திருவிழாவில் 13 முறை  சிறந்த நாடகங்களை இயற்றி தொடர்ச்சியாக வென்றாh;   காலஸ் எனும் ஊரில் பிறந்தார். 65 வருடங்களாக 125 நாடகங்கள் இயற்றியுள்ளனா;.அவற்றில் 7 நாடகங்கள் மட்டுமே கிடைக்கின்றன.24 முறை டையானிசஸ் திருவிழாவில் வென்றுள்ளார். யுரிப்பைட்ஸ் என்பவர் 92 நாடகங்கள் இயற்றியுள்ளார், அதில் முழுமையாக 19 நூல்கல் கிடைக்கின்றன.
உலகம் போற்றும் கிரேக்க நாயகர்கள்
அறிஞர்கள்- சாக்கரட{ஸ் ,அரிஸ்டாட்டில், பிளட்டோ  எனும் மூவரும் உலக புகழ்பெற்ற அறிஞர்களாக இன்றும் போற்றபடுகின்றனர். காப்பிய பேம்சன்- ஹெமர் அழைக்கபடுகிறார். இந்தியாவின் மாகபாரதம், இராமாயணம் போன்று இலியட், ஒடிசி எனும் இரு நூல்களும் போற்றபடுகிறது. உலகை வென்ற அரசன் மாவீரன் மகா அலெக்சாண்டர் தோன்றிய நாடு, கிரேக்கம் தான். இவ்வாறாக பல சிறப்புகளுக்கு சொந்தகாரர்கள் கிரேக்கர்களே.

நிறைவாக 

                  மிக பழமையான நாகரிகமான கிரேக்கம் பல கூறுகளை தன்னகத்தே கொன்டது. உலகளவில் தணக்கென ஓர் அழியா அடையாளத்தையும், பாரம்பரியத்தையும், வரலாற்றையும் தன்னகத்தே கொன்டுள்ளது. இன்று வரை பிலிப்ஸ் புதல்வனுக்கு இனையாக யாரும் உருவாகவே இல்லை எனலாம். மனம் அழகானதாகயிருந்தால் நாம் காணும் காட்சிகளும் அழகானதாகவே இருக்கும் என்ற அரிஸ்டாடில் தோன்றி வளர்த்த மொழி இந்த கிரேக்கமொழி, இவ்வாறு பல சிறப்புகளைபற்றி கிரேக்க வரலாறுகள் நமக்கு விளக்குகிறது.

துணைநூற் பட்டியல் 

உலகச்செம்மொழிகள். 2011
செம்மொழி தகுதிகள் 2008
கீரிஸ் வாழ்ந்த வரலாறு.


புதன், 4 ஏப்ரல், 2018

நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை

நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை

எருமை.
மந்த புத்தி மகிஷம்.
வெயில் என்றாலும் விலகாது.
மழை வந்தாலும் மயங்காது.
என் வழி தனி வழி என்று அதன் வழி செல்லும்.
அவந்தி நாட்டில் அப்படி ஒரு எருமை. 
அதற்கு ஒரு நாள் ரொம்ப பசி. மாட்டிற்கும் யானைக்கும் உடல் எல்லாம் வயிறு தானே.
எதை தின்னலாம் என்று சுற்றிலும் பார்த்தது. எதிரிலே ஒரு குளம். அதிலே 
ஒரு குவளை மலர்.
அந்த மலரை பறித்து உண்ணலாம் என்று குளத்தில் இறங்கி மலரை வாயில் கவ்வியது.
அப்போது அந்த மலரில் இருந்த வண்டுகள் வெளியே தப்பி வந்து ரீங்காரமிட்டன.
அந்த இசையில் மயங்கி மலரை உண்ணாமல் விட்டது அந்த எருமை.
அப்படி எருமைக்குக் கூட இசை ஞானம் இருக்கும் ஊர் அவந்தி.
அந்த நாட்டின் தலைவன் இந்த மன்னன்...பெரிய யானையின் வலிமையையை கொண்டவன் இவன் என்று அவந்தி நாட்டின் மன்னனை தமயந்திக்கு அறிமுகப் படுத்துகிறாள் அவளுடைய தோழி...

வண்ணக் குவளை மலர் வௌவி வண்டு எடுத்த
பண்ணில் செவி வைத்துப் பைங்குவளை உண்ணாது
அரும் கடா நிற்கும் அவந்தி நாடு ஆளும்
இரும் கடா யானை இவன்

தழுவாத போது....


நந்திக் கலம்பகம் - தழுவாத போது....

அவளை விட்டு நீங்கினால் சுடுகிறது, அவ கிட்ட போனால் குளிர்கிறது..இந்த வினோத தீயை இவள் எங்கு பெற்றாள் என்று வியக்கிறார் வள்ளுவர்.
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் 
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் என்னை விட்டு தனியே கானகம் போகிறேன் என்று சொல்கிறாயே, அந்த ஊழிக் கால தீ கூட உன் பிரிவை விட அதிகமாக சுடாது, "நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?" என்று பிரிவினால் வரும் சூட்டினை சொல்கிறார் கம்பர்.
பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்."
நந்திக் கலம்பகத்தில் காதலனை பிரிந்த காதலி, பிரிவின் வெம்மையால் தவிக்கிறாள். அவள் தோழிகள் அவள் மேல் கொஞ்சம் குளிர்ந்த சந்தனத்தை எடுத்து பூசுகிறார்கள். அது என்னவோ அவளுக்கு தீயை அள்ளி பூசிய மாதிரி இருக்கிறதாம்.....
செந்​தழ​லின் சாற்​றைப் பிழிந்து செழுஞ்​சீ​தச்
சந்​த​ன​மென் றாரோ தட​வி​னார்-​பைந்​த​மிழை
ஆய்​கின்ற கோன்​நந்தி ஆகம் தழு​வா​மல்
வேகின்ற பாவி​யேன் மேல்'

காதலியின் இறுதி வாசகம்.

காதலியின் இறுதி வாசகம். உன்னைதான் வேண்டும் உண்மையைச் சொல்லியும்  துரோகிதான்! வீட்டிற்கும்  உன்னினைவால் அவருக்கும். நம்    நினை...